வாழப்பாடியில் மனைவியின் கரு கலைந்ததால் பேக்கரி ஊழியர் தற்கொலை


வாழப்பாடியில் மனைவியின் கரு கலைந்ததால் பேக்கரி ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 4 July 2022 3:04 AM IST (Updated: 4 July 2022 3:51 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில் மனைவியின் கரு கலைந்ததால் பேக்கரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

வாழப்பாடி:

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருைடய மகன் அஜித்குமார் (வயது27). இவர் வாழப்பாடி பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சின்னசேலம் பகுதியை சேர்ந்த தீபா (20) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து புதுமண தம்பதி வாழப்பாடியில் வீடு எடுத்து தங்கினர். மேலும் தீபாவும் அதே பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து 3 மாத கர்ப்பிணியாக தீபா இருந்தார். இந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்தது. இதனால் அஜித்குமார் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் கரு கலைந்தது குறித்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அஜித்குமார் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியின் கரு கலைந்ததால் மனமுடைந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story