பள்ளிக்கூட பஸ் மோதி பேக்கரி ஊழியர் சாவு
பென்னாகரம் அருகே பள்ளிக்கூட பஸ் மோதி பேக்கரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பென்னாகரம்
பேக்கரி ஊழியர்
பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ் (வயது 23). இவர், ஊட்டியில் ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்து இருந்தார்.
நேற்று முன்தினம் தன்னுடைய நண்பருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் போடூரில் இருந்து ஆதனூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆதனூரில் எதிரே வந்த தனியார் பள்ளிக்கூட பஸ், விக்னேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த விக்னேஷ் உறவினர்கள், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.