செங்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


செங்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x

செங்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் சுலைமான் நபிஜூம்மா பள்ளிவாசலில் இமாம் செய்யது சுல்தான் பைஜி சிறப்பு தொழுகை நடத்தினார். பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்சார்பில் காசுக்கடை பஜாரில் திறந்தவெளியில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல்சலாம் சிறப்பு தொழுகை நடத்தினார். நகரத்தலைவர் சாகுல்அமீது, செயலாளர ்இஸ்மாயில் கரீம், பொருளாளர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இதபோல் டவுன் ஹால் ரோடு திறந்த வெளியில் மாவட்ட நிர்வாகி அப்துல்அஜீஸ் தலமையிலும், பம்பு ஹவுஸ்ரோடு திறந்தவெளியில் மாநில நிர்வாகி அப்துல்ரகுமான் பிர்தவுசி தலைமையிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.


Next Story