ஆம்பூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஆம்பூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஈத்கா மைதானம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு சொற்பொழிவும், அதைத்தொடர்ந்து சிறப்பு தொழுகையும் நடந்தது. பண்டிகையை முன்னிட்டு காலையில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தொழுகை நடக்கும் இடங்களுக்கு வந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடித்ததும் ஒருவரை ஒருவரை கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ஆம்பூரில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் உமராபாத், பெரியங்குப்பம், மின்னூர், சோலூர், அருங்கல்துருகம் அகிய பகுதியில் சிறப்பு தொழுகை நடந்தது. ஆம்பூர் பகுதியில் நடந்த இந்த சிறப்பு தொழுகையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்