செல்வ முத்து மாரியம்மன் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி


செல்வ முத்து மாரியம்மன் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி
x

செல்வ முத்து மாரியம்மன் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் செய்யப்பட்டது. அதனையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. விழாவில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் அங்குசாமி, ரமேஷ், மதனகோபால சுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு யாகத்தை கச்சேரி விநாயகர் கோவில் அர்ச்சகர் பிரசாத் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உதவி சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.


Next Story