சாலைக்குமார சுவாமி கோவிலில் பாலாலயம்


சாலைக்குமார சுவாமி கோவிலில் பாலாலயம்
x

நெல்லை சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவிலில் பாலாலயம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாளையஞ் சாலை குமார சுவாமி கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பாலாலய விழா தொடங்கியது. காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சுவாமி மூலஸ்தான விமானம், சண்முகர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்கள் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Next Story