50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வினியோகம்


50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வினியோகம்
x

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார்.இது குறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உளுந்து சாகுபடி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பெரும்பாலும் குறுவை, சம்பா என 2 போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெற்பயிர் நிலத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிக் கொள்வதால் நிலம் பாதிக்கப்படுகிறது. எனவே உளுந்து சாகுபடி செய்யும் போது வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் நிலைநிறுத்தி மண்வளம் மேம்படுத்துகிறது. மேலும் மண் அரிப்பை கட்டுப்படுத்துவதுடன் அதன் ஆழமான வேர் அமைப்பும், பசுமையாக நிலத்தை மூடி இருப்பதால் களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.

வம்பன் 8 ரக உளுந்து விதைகள்

தற்போது சித்திரைப் பட்டத்திற்கு ஏற்ற வம்பன் 8 ரக உளுந்து விதை பட்டுக்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்கம் மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே உளுந்து விதை தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story