வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை
வடகாடு பரமநகர் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. பல சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், வடகாடு, கீழாத்தூர், பனங்குளம், எரிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வழுக்கு மரம் ஏறும் வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் எரிச்சி மற்றும் பனங்குளம் அணியை சேர்ந்த 9 பேர் கொண்ட இளைஞர்கள் அணியினர் ஒருவர் பின் ஒருவராக இணைந்து சுமார் 55 அடி உயரம் கொண்ட வழுக்கு மரத்தின் உச்சியை அடைந்து வெற்றி பெற்றனர். பின்னர் முதல் பரிசான ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனர். போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story