பால்குடம் ஊர்வலம்


பால்குடம் ஊர்வலம்
x

சிவந்திபுரம் நாராயண சுவாமி கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் நாராயண சுவாமி கோவிலில் ஆவணி மாத தர்ம திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், உகப்படிப்பு பணிவிடை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நாராயண சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளல், ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. தொடர்ந்து 10-ம் நாளான நேற்று பாபநாசத்தில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சிவந்திபுரத்திற்கு வந்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கோலாட்டம் ஆடியும், சிறுவர்கள் செண்டை மேளம் இசைத்தும் வந்தனர். மாலையில் உகப்படிப்பு பணிவிடை, அன்னதானம் நடைபெற்றது. இரவில் நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story