அக்னீஸ்வரி காளியம்மன் கோவிலில் பால்குட விழா


அக்னீஸ்வரி காளியம்மன் கோவிலில் பால்குட விழா
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேந்தங்குடி அக்னீஸ்வரி காளியம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி அக்னீஸ்வரி காளியம்மன் கோவிலில் பால்குட விழா கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் விதி உலா நடந்தது வந்தது. இதை தொடர்ந்து பால்குட விழா நடந்தது. இதை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்ற கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story