அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட விழா


அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட விழா
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதிரங்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி யாகசாலை பூஜை, மஹாபூர்ணஹூதி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து நடந்த பால்குட விழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story