காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா


காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
x

அதிராம்பட்டினம் அருகே காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து பால்குட விழா நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story