மகாகணபதி கோவிலில் பால்குட விழா மகாகணபதி கோவிலில் பால்குட விழா


மகாகணபதி கோவிலில் பால்குட விழா மகாகணபதி கோவிலில் பால்குட விழா
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டை அருகே மகாகணபதி கோவிலில் பால்குட விழா மகாகணபதி கோவிலில் பால்குட விழா நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே மகாகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மகா கணபதிக்கு பால், தயிர், பன்னீர், தேன், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற ெபாருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story