கிளாமங்கலம் கிராமத்தில் வயல் ஆய்வு முகாம்


கிளாமங்கலம் கிராமத்தில் வயல் ஆய்வு முகாம்
x

கிளாமங்கலம் கிராமத்தில் தென்னையில் நோய் தாக்குதல் குறித்து வயல் ஆய்வு முகாம் நடந்தது. இதில் நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

கிளாமங்கலம் கிராமத்தில் தென்னையில் நோய் தாக்குதல் குறித்து வயல் ஆய்வு முகாம் நடந்தது. இதில் நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

வயல் ஆய்வு முகாம்

தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை வயல் ஆய்வு முகாம் கிளாமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் திருவோணம் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுதா, ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி பேராசிரியர் மதிராஜன் மற்றும் வேளாண் அலுவலர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தென்னையில் நோய் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

அப்போது, தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலின் அறிகுறிகள் தாக்கப்பட்ட தென்னை ஓலைகளில் உட்பகுதியில் சுருள்- சுருளாக நீள் வட்ட வடிவில் முட்டைகளை இலைகளில் வைத்து விடும். பின்பு இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலைகளில் அடியில் கூட்டமாக இருந்து கொண்டு, சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.

நோய் தடுப்பு முறைகள்

இவ்வாறு பாதிக்கப்பட்ட தென்னை ஓலையில் வெளியேறும் தேன் போன்ற இனிப்பான திரவம் கீழே உள்ள இலைகளில் விழுந்து அது பரவி கரும் பூசானமாக வளர்வதால், கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு தென்னை மரத்தின் வளர்ச்சி பாதிப்படைகிறது.இந்த பூச்சி தாக்குதலை ஒருங்கிணைந்த வேளாண்மை முறையில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தினை உபயோகிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மஞ்சள் நிற பாலீத்தின் தாள்களால் ஆன ஒட்டுப்பொறிகளை பயன்படுத்தி விசைத்தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீச்சி அடித்து கட்டுப்படுத்தலாம்.

என் கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் மூலம் ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது கட்டி பூச்சியை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இதில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story