ருத்ராபதியார் கோவிலில் பால்குட திருவிழா
குத்தாலம் ருத்ராபதியார் கோவிலில் பால்குட திருவிழா
மயிலாடுதுறை
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சவுந்தரநாயகி சமேத ருத்ராபதியார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து பிரசாதம் பெற்று சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள். பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் 106-ம் ஆண்டு கரகம், காவடி, பால்குட திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக விரதமிருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து கரகம், அலகு காவடி, கூண்டு காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து பல்வேறு வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், குத்தாலம் தோப்பு தெருவாசிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story