கோவிலில் பால்குட திருவிழா


கோவிலில் பால்குட திருவிழா
x

கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள மேலகருப்பூர் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன், முனீஸ்வரன், கருப்புசாமி ஆகிய ெதய்வங்கள் எழுந்தருளியுள்ள கோவிலில் அக்னி கரகம் எடுத்து பால்குட திருவிழா நடத்தப்பட்டது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, தொடர்ந்து ஒரு வாரமாக சிறப்பு மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது. தினமும் சாமி வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி, அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும், அக்னி கரகம், பால்குடம் எடுத்தும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் விநாயகர், மாரியம்மன், முனீஸ்வரன், கருப்பசாமி ஆகிய தெய்வங்களின் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து நாளை(புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.


Next Story