பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பால்குட காவடி திருவிழா


பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பால்குட காவடி திருவிழா
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் காந்திநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பால்குட காவடி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காந்தி நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 10-ம் ஆண்டு பால்குட காவடி திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவேரி தீர்த்த படித்துறையில் இருந்து காவடிகள் அலகு காவடி, கூண்டு காவடி,கரகம் ,பால்குடங்கள் உள்ளிட்டவை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள் மேல வாத்தியங்கள் முழங்க தேர் இழுத்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பால் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமிவீதி உலா காட்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராமமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story