பல்லடத்தில் இருதரப்பினர் மோதல்


பல்லடத்தில் இருதரப்பினர் மோதல்
x
திருப்பூர்


பல்லடம் அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருதரப்பினர் மோதல்

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தருக்கும், நடந்து சென்றவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர்.

இதனால் இருதரப்பினர் மோதும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து கலைந்து போக சொன்னார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு பல்லடத்தில் இருதரப்பினர் மோதல்பல்லடத்தில் இருதரப்பினர் மோதல்ஆய்வு

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு வந்தார். அப்போது அவரிடம் ஒரு தரப்பினர் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதன் பின்னர் இரு தரப்பினரும் புகார் அளிக்க தற்போது பல்லடம் காவல் நிலையம் முன்பு திரண்டுள்ளனர்.


Next Story