திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை


திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை
x

தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பு

குமரியில் கடந்த 16-ந் தேதி அன்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை மறுநாளும் நீடித்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் மழை சற்று குறைந்தாலும் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது.

அதே சமயத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீரும், பாசன கால்வாயிலும் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை தொ டர்ந்து நீடிக்கிறது. நேற்று 4-வது நாளாகவும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அருவியின் அனைத்து பகுதிகளிலும் பாறை தெறியாத வகையில் தண்ணீர் பரந்து பாய்கிறது. அருவியில் இருந்து பாயும் வெள்ளத்தில் இருந்து நீர்த்திவலைகள் புகை மண்டலமாய் வெகு தூரத்துக்கு தெறிக்கிறது. குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், இந்த ரம்மியமான காட்சியை பார்த்தபடி செல்கிறார்கள்.


Next Story