ரூ.17 லட்சம் மதிப்பிலான 44 டன் விதைநெல் விற்க தடை


ரூ.17 லட்சம் மதிப்பிலான 44 டன் விதைநெல் விற்க தடை
x

தஞ்சை மாவட்டத்தில் விதை சட்ட விதிமீறல்கள் என கண்டறியப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான 44 டன் விதைநெல் விற்பனை செய்ய அதிகாாகிள் தடை விதித்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விதை சட்ட விதிமீறல்கள் என கண்டறியப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான 44 டன் விதைநெல் விற்பனை செய்ய அதிகாாகிள் தடை விதித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி தலைமையில் விதை ஆய்வாளர்கள் பாலையன், நவீன் சேவியர், முனியய்யா, சத்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீதை விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதை விற்பனையாளர்கள், நெல் விதைகளின் முளைப்பு திறனை கட்டாயம் உறுதி செய்த பின்னர் மட்டுமே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும் என எச்சரித்தனர்.

ரூ.17 லட்சம் மதிப்புள்ள விதைகள்

பின்னர், விநாயகமூர்த்தி கூறுகையில், மாவட்டத்துக்குட்பட்ட 31 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 49 அலுவலக விதை நெல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முளைப்பு திறன் பரிசோதனைக்காக தஞ்சை விதை பரிசோதனை நிலையத்தில் அளிக்கப்பட்டது. விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலையங்களில் 13 விதை குவியல்களில் ரூ.17.18 லட்சம் மதிப்பிலான 44.72 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது என்றார்.


Next Story