கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்


கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்
x

கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பா.ம.க. நகர செயற்குழு கூட்டம், நகர செயலாளர் எம்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, மாநில செயற்குழு உறுப்பினர் நல்லூர் எஸ்.பி.சண்முகம், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பகவான் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை நகரத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும், ராணிப்பேட்டை மாவட்டத்தில், விதிமுறைகளை மீறி 24 மணி நேரமும் கள்ள மார்க்கெட்டில் அரசு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலூரில் இருந்து சென்னை செல்லும் அனைத்து அரசு பஸ்களும், சென்னையில் இருந்து வேலூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும், ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணி, மாநில சமூக நீதிப் பேரவை நிர்வாகி வக்கீல் ஜானகிராமன், உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story