மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழைப்பழம் விற்பனை மந்தம்


மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழைப்பழம் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழைப்பழம் விற்பனை மந்தம் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் வாழைப்பழம், செங்கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. வாழைப்பழம் தமிழர்களின் வாழ்வில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழையூர், கிடாரம் கொண்டான், ராதாநல்லூர், செம்பதன்இருப்பு, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் விளையும் வாழைப்பழங்களுக்கு தனி கிராக்கி உண்டு. ஆனால் மேற்கண்ட பகுதியில் வாழை உற்பத்தி குறைந்துவிட்டது. இந்த ஆண்டு 100 வாழைப்பழம் கொண்ட தாரின் விலை ரூ.300 வரைக்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழைப்பழங்கள் விற்பனை மந்தமாக காணப்படுகிறது. இதனால் வாழை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Next Story