விழுப்புரத்தில்புத்தக திருவிழா அரங்குகள் அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
விழுப்புரத்தில் புத்தக திருவிழா அரங்குகள் அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி 100 அரங்குகளுடன் புத்தக திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டு தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகரமன்ற கவுன்சிலர் மணவாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.