கெலமங்கலத்தில் 1,200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,200 கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினார். கெலமங்கலம், உனிசெட்டி,பெட்டமுகிலாளம், தடிக்கல், ராயக்கோட்டை, நாகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் இதில் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. இதில் டாக்டர்கள் கோபி, அனிஷா பர்வின், பிரபாவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, வட்டார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவகுருநாதன், ஏகாம்பரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், பிரசாந்த், ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரிஉள்பட பலர் கலந்துகொண்டனர்.