ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்
பிரதமரின் கவுரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து நிதி கிடைக்க ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை 30-ந் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கவுரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து நிதி கிடைக்க ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை 30-ந் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்து உள்ள தகுதியான விவசாயிகளுக்கு 12 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை வருகிற 30-ந் தேதிக்குள் இணைத்து பதிவேற்றம் செய்வது கட்டாயம் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் காலதாமதமின்றி உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பொது சேவை மையம் மற்றும் தபால் நிலையங்களுக்கு சென்று பதிவேற்றம் செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் பாலா தெரிவித்து உள்ளார்.