கஞ்சா வழக்கில் கைதான 4 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
ஆற்காட்டில் கஞ்சா வழக்கில் கைதான 4 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆற்காடு பகுதிகளைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 25), சதீஷ்குமார் (27), பாலாஜி (28), பழனி (32) ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
அவர்களின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என ஆற்காட்டில் உள்ள தனியார் வங்கி மேலாளருக்கு ஆற்காடு டவுன் போலீசார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா வியாபாரிகளான பார்த்திபன், சதீஷ்குமார், பாலாஜி, பழனி ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் பண பரிவர்த்தனைகளை ஏதும் நடைபெறாதவாறு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story