கஞ்சா விற்ற 4 பேரின் வங்கி கணக்கு முடக்கம்


கஞ்சா விற்ற 4 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
x

கஞ்சா விற்ற 4 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கஞ்சா விற்ற 4 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீசார் பெருவிளை சானல்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வடசேரி திரட்டு தெருவை சேர்ந்த காட்வின் எட்வர்ட் (வயது 25), பெருவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரகுமார் (19) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செல்வகுமார் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, செல்வகுமார் மீதும் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி குமரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தற்போது கைதான காட்வின் எட்வர்ட், சந்திரகுமார் ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் அவர்களின் தாயாரின் வங்கி கணக்கு என மொத்தம் 4 பேரின் வங்கி கணக்குகளை முடக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story