கானாப்பூர் கிராமத்தில் பாசன குள கரை உடைப்பு


கானாப்பூர் கிராமத்தில் பாசன குள கரை உடைப்பு
x

கானாப்பூர் கிராமத்தில் உள்ள பாசன குள கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் வயல்களில் தண்ணீர் புகுந்ததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம்:

பாசன குள கரை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கானாப்பூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசனகுளம் உள்ளது. இந்த பாசனகுளம் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.செட்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இந்த பாசனகுள கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி தரிசாக கிடந்த வயல்வெளிகளில் நிரம்பி உள்ளது. மேலும் பாசனகுளத்தில் உள்ள நீர் வீணாக பாம்பாற்றில் கலந்து செல்கின்றது.

சம்பா சாகுபடி பாதிப்பு

தற்போது கே.செட்டிப்பட்டி பகுதியில் நாற்றுப்பாவி நடவு செய்ய தயாராக இருக்கும் நிலையில் வயல்களில் தண்ணீர் கிடக்கின்றது. இதனால் சம்பா பருவ சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கானாப்பூர் பாசனகுள கரை உடைப்பை சரி செய்ய வேண்டும். கரையை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் பெய்த மழை நீர் வீணாக பாம்பாற்றில் கலந்தது. வரும் காலங்களில் பெய்யும் மழை நீரை சேகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story