மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வங்கி ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வங்கி ஊழியர் பலியானார்.
வாலாஜா
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வங்கி ஊழியர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மூர் சமத்துவபுரம் காஞ்சி வீதியில் வசித்து வருபவர் ஜீவநேசன் இவரது மகன் சிவா (வயது 33), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தார் மேல் புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது எதிரே மேல் புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்த தனபதி மகன் சரத்குமார் (27) சென்ற மோட்டார்சைக்கிளும் இவரது மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே சிவா இறநற்து விட்டார். சரத்குமார் படுகாயம் அடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காதக அனுப்பி வைத்து வாலாஜா போலீசார் மேல் விசாரணை றநடத்தி வருகின்றனர்.