வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2022 1:00 AM IST (Updated: 4 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டம்

ஈரோடு

ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில், ஈரோடு கால்நடை ஆஸ்பத்திரி ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாக்கியகுமார் தலைமை வகித்தார்.வங்கி ஊழியர்கள் மீதான பணி மற்றும் பணி பாதுகாப்பின் மீதான தாக்குதல்களை கைவிடவேண்டும். நிரந்தர பணிகளை ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நிரப்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிற்சங்கங்களின் மீதும், தொழிற்சங்க நிர்வாகிகள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பொதுச்செயலாளர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் ஜோஸ்சுகுமார், ஸ்ரீதரன், சூரிய நாராயணன், ரமேஷ்குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

1 More update

Related Tags :
Next Story