விழுப்புரத்தில்வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், வாரத்திற்கு 5 நாள் மட்டுமே பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை வங்கி நிர்வாகம் உடனடியாக தொடங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், வருகிற 30, 31-ந் தேதி ஆகிய நாட்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று மாலை விழுப்புரத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா பொதுச்செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அரசுப்பணியாளர் சங்க முன்னாள் மாநில தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார். இதில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நீலகண்டன், பாலமுருகன், மோகன், ஆண்ட்ரூஸ்ட், சிவக்குமார், தண்டபாணி, நதியா, ரம்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.