Normal
செஞ்சியில் பரபரப்பு வங்கியில் திடீர் தீ விபத்து
செஞ்சியில் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு இரவு நேர காவலாளிகள் இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு, உள்ளே இருந்து கரும் புகை வெளிவருவதை கண்ட பொதுமக்கள் செஞ்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.
மின்கசிவின் காரணமாக, இந்த தீவிபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story