மானியத்துடன் வங்கிக்கடன்
தொழில் தொடங்க ரூ.40 லட்சம் வரை வங்கிக்கடன் பெற்றுத் தரப்படும் என வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா கூறினார்.
திருவாரூர்
திருவாரூரில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் தொழில் திட்ட இணை மானியம் குறித்த வங்கியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுடனான கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் 174 ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது.
மானியத்துடன் வங்கிக்கடன்
ஊரக பகுதிகளில் ஏற்கனவே தொழில் செய்து வருவோர் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோர் ஆகியோரை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு தொழில் தொடங்குவது, வணிகத்திட்டம் தயார் செய்வது குறித்து ஆலோசனை கூற வேண்டும். தொழில் திட்டத்தின் அடிப்படையில் 30 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை வங்கிகள் வாயிலாக அவர்களுக்கு கடன் பெற்றுத் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம் மற்றும் வங்கி மேலாளர்கள், தோட்டக்கலை, வேளாண்மை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்பட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story