நாகர்கோவிலில்வங்கி மேலாளர்-மனைவியை தாக்கியவர் கைது


நாகர்கோவிலில்வங்கி மேலாளர்-மனைவியை தாக்கியவர் கைது
x

நாகர்கோவிலில்வங்கி மேலாளர்-மனைவியை தாக்கியவர் கைதுெசய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடலிவிளையை சேர்ந்தவர் சித்திரவேல் (வயது 35). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்திரன் (55). வீட்டின் கட்டிட வேலை தொடர்பாக சந்திரன் வீட்டின் சுவற்றில் சித்திரவேல் ஆணி அடித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதமாக மாறியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரன், அவருடைய மனைவி சத்தியா (50), அதே பகுதியை சேர்ந்த அஜெய்க் (33), சூர்யா, மதன், சுதாகர், குட்டன், முருகன், சார்லஸ் மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் என மொத்தம் 11 பேர் சேர்ந்து சித்திரவேலை தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த சித்திரவேலின் மனைவி சிந்துஜாவும் தாக்கப்பட்டார். மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுதொடர்பாக சித்திரவேல் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தாக்குதலின் போது, தன் மனைவியின் 10 பவுன் நகையை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கழற்றி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அஜெய்க் மற்றும் சுதாகர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-*


Next Story