கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை
கொல்லங்கோடு அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆலயத்தில் கொள்ளை
கொல்லங்கோடு அருகே உள்ள நடைக்காவு கோனசேரியில் புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் குருசடி உள்ளது. நேற்று முன்தினம் மதியம் ஆலயத்துக்கு பலரும் வந்து பிரார்த்தனை நடத்தி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஆலயத்துக்கு வந்தவர்கள் குருசடிக்கு வெளியே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளைய டிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஆலய பங்கு பேரவை நிர்வாகி ஹெர்பர்ட்சனிடம் கூறினார்கள்.
போலீசார் விசாரணை
உடனே அவர் நேரில் வந்து பார்த்தார். பின்னர் ஹெர்பர்ட்சன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆலயத்துக்கு வந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.8 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.