தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது


தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
x

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே புது சூரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நம்பியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து கடைக்காரரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 700 கிராம் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story