"பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை" - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியானது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் காட்சியை இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களான கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், ஜெயராம் ஆகியோர் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 3,888 மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க இணைய தள சேவை நிறுவனங்கள் தடுக்கக் கோரி லைகா பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி எஸ்.சௌந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Next Story