தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரியில் பனியன்கள் திருடிய டிரைவர் கைது
தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரியில் பனியன்கள் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரியில் ஏற்றுமதிக்காக கொண்டு வரப்பட்ட பனியன்களை திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பனியன்கள்
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரியில் பனியன்கள் கொண்டு வரப்பட்டன. தூத்துக்குடியில் உள்ள நிறுவனத்தில் வைத்து பார்த்த போது, கண்டெய்னர் லாரியில் இருந்த ரூ.71 ஆயிரத்து 400 மதிப்புள்ள 357 பனியன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
கைது
இதுகுறித்து ஏற்றுமதி நிறுவனத்தில் டிரான்ஸ்போர்ட் பொறுப்பாளரான தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த அதிசயமணி மகன் ஆபிரகாம் அமிர்தராஜ் (36) என்பவர் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கலில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த கண்டெய்னர் லாரியின் டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பகவதி ராஜ் (50) என்பவர் கண்டெய்னர் லாரியில் உள்ள பனியன்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து பகவதிராஜை கைது செய்தார். அவரிடம் இருந்து, திருடிய பனியன்களையும் பறிமுதல் செய்தார்.