பக்ரீத் சிறப்பு தொழுகை


பக்ரீத் சிறப்பு தொழுகை
x

வாலாஜாவில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வாலாஜாவில் ஆற்காடு நவாப் முகமது அலி கட்டிய ஜூம்மா மசூதி உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் ஒன்று கூடி தொழுகை நடத்தும் வசதி உள்ளது. சுமார் 150 அடி நீளம், 50 அடி அகலம் உள்ள இந்த மசூதியில் கட்டிடம் முழுவதும் அதன் எதிரில் உள்ள குளத்தின் தண்ணீரில் நன்கு தெரியும்படி கட்டப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.


Next Story