மதுக்கடைகளை 3 நாட்கள் மூட வேண்டும்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி மதுக்கடைகளை 3 நாட்கள் மூட வேண்டும் என்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதாவினர் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமையில், துணைத்தலைவர் முருகன், பொருளாளர் சீனிவாசன், கிழக்கு பகுதி தலைவர் மணிகண்டன், ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம் மற்றும் நிர்வாகிகள், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை வழங்கினர். அதில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. அன்று, ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும். மேலும் தேரோட்டம் அன்றும், மறுநாள் (8-ந்தேதி) நடைபெறும் பல்லக்கு உற்சவம் மற்றும் அடுத்த நாள் (9-ந் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது. இந்த 3 நாட்களிலும், ஓசூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story