பார்டுவர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் பார்டுவர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
சிவகிரி:
சிவகிரியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும், ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். செயலாளர் எஸ்.தங்கபாண்டியன், பொருளாளர் ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story