கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்


கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்
x

மீன்பிடி தடைக்காலம் இன்னும் 6 நாட்களில் நிறைவடைய உள்ளதால் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

மீன்பிடி தடைக்காலம் இன்னும் 6 நாட்களில் நிறைவடைய உள்ளதால் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் கடந்த 6 ஆண்டுக்கு முன்வரை. ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந் தேதிவரை 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதித்து வந்தது.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதித்து நடைமுறைபடுத்தி வருகிறது.இதன்படி கடந்த 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

10 ஆயிரம் பேர் வேலையிழப்பு

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன்வியாபாரிகள், துறைமுகங்களில் கடைவைத்து தொழில் நடத்துபவர்கள், கருவாடு வியாபாரிகள், ஐஸ் கம்பெனி உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் வேலையிழந்து தவித்து வந்தனர்.

கடலுக்கு செல்ல தயாராக உள்ளனர்

இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் இன்னும் 6 நாட்களில் நிறைவடைய உள்ளது.தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் படகு, வலை போன்ற தளவாட பொருட்களை மராமத்து செய்து கடலுக்கு செல்ல ஆவலோடு தயாராக உள்ளனர்.


Next Story