தரிசுகளை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி திட்டம்: கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு


தரிசுகளை விளைநிலங்களாக   மாற்றி பயிர் சாகுபடி திட்டம்:  கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் வட்டாரத்தில் தரிசுகளை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் வட்டாரத்தில் தரிசுநிலங்களை விளை நிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி மேற்கொள்ளும் திட்டப்பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தரிசு நிலங்களை...

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விளாத்திகுளம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021- 22 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றி பயிர் சாகுபடி செய்தல் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகள், ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பணிகளை தலைகாட்டுபுரம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். பயிர் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது குறித்தும், வேளாண்துறை திட்டங்களின் பயன்பாடுகள், சாதக பாதகங்கள் குறித்தும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து கிராமத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அதன் பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கலந்துகொண்டவர்கள்

ஆய்வின் போது எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துகுமார், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story