சிவன்மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் தடுப்புகள்


சிவன்மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் தடுப்புகள்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே சிவன்மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.டி.ஓ.விடம் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே சிவன்மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.டி.ஓ.விடம் மனு அளிக்கப்பட்டது.

படிக்கட்டுகளில் தடுப்புகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நம்பாலக்கோட்டையில் சிவன்மலை உள்ளது. இதன் அருகே வேட்டைக்கொரு மகன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் வேட்டைக்கொரு மகன் கோவில் நிர்வாக பொறுப்பு நிலம்பூர் கோவில் நிர்வாகம் கட்டுப்பாட்டுக்கு சென்றது.

இருப்பினும், சிவன்மலையில் உள்ள சிவன் கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும் முக்கிய நாட்களில் விழாக்கள் நடத்தப்பட்டது. மாதந்தோறும் பவுர்ணமி திருவிழாவும் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சிவன்மலை கோவிலுக்கு செல்வதற்காக பூசாரி, பக்தர்கள் பலர் வந்தனர். அப்போது படிக்கட்டுகளில் நடந்து செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது.

ஆர்.டி.ஓ.விடம் புகார்

மேலும் படிக்கட்டுகள் நடுவில், வேட்டைக்கொருமகன் கோவில் நிலம். இங்கு வெளி ஆட்கள் செல்ல அனுமதி இல்லை. மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்த பேனர் கட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து பூசாரி புதர்களுக்கு இடையே நடந்து சென்று கோவிலில் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு பூஜைகளை செய்தார். தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏற முடியாததால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் அப்பகுதியில் நின்று வழிபாடு செய்து விட்டு திரும்பி சென்றனர்.

இதுகுறித்து சிவன்மலை கோவில் கமிட்டி சார்பில், கூடலூர் ஆர்.டி.ஓ., போலீசாருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் அரசு நிலத்தில் அன்றாடம் வழிபட்டு வரும் கோவிலுக்கு செல்லும் பாதையை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வருவாய்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story