குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சேதம்
கூடலூர் அருகே குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது.
தேனி
தமிழக-கேரள எல்லையில் குமுளி மலைப்பகுதி அமைந்துள்ளது. தேக்கடிக்கு சுற்றுலா வரும் பயணிகளும், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் குமுளி மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலத்திற்கு மேலே உள்ள வளைவு பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story