விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நால்ரோடு பகுதி உள்ளது. இங்கிருந்து திருப்பூர், வேலம்பாளையம், பல்லடம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே அந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது. ஆறுமுத்தாம்பாளையத்திலிருந்து, ஏராளமான தொழிலாளர்கள், கரைப்புதூர், சின்னக்கரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.அவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நால்ரோடு சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. மேலும் பள்ளிகளுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்கள் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும், இந்த ரோட்டின் வழியாக ஏராளமான கல்குவாரி லாரிகளும் செல்கின்றன. எனவே நால்ரோடு பகுதியில் வேகத்தடைகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
-