அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்


அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்
x

ஓசூரில் அனைத்து வார்டு பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சத்யா கூறினார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மாநகராட்சி அவசர கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எல். இ.டி. பல்புகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளம், இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவதால், மாநகராட்சி சார்பில் அதனை சுத்தம் செய்யவோ, தூர்வாரவோ முடியாது. பஸ் நிலையம் அருகேயுள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்து, ரூ.18 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டவும், எம்.ஜி.ஆர். மார்க்கெட், பழைய பெங்களூரு சாலை, பழைய பஸ் நிலைய பகுதி, பழைய நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வணிக வளாகங்கள் அமைக்க அரசுக்கு, முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பு கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மொத்தம் 153 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story