நமக்கு நாமே திட்டத்தில் அடிப்படை வசதிகள்
நமக்கு நாமே திட்டத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பங்குத் தொகை கொண்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் திட்டங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீர் நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், சாலைகள் தெரு விளக்குகள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் புதுப்பித்தல், நவீன நூலகங்கள் அமைத்தல், கண்காணிப்பு கேமரா நிறுவுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளலாம். இந்த பணிகளை செய்ய நகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ளலாம் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story