அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்


அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே மரிமானப்பள்ளி இருளர் காலனிக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று இருளர் இன மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர் அருகே மரிமானப்பள்ளி இருளர் காலனிக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று இருளர் இன மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மரிமானப்பள்ளி கிராமம் இருளர் காலனியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பர்கூர் தாலுகா, மல்லப்பாடி ஊராட்சி மரிமானப்பள்ளி கிராம இருளர் காலனியில் 33 குடும்பங்களை சேர்ந்த, 90 பேர், 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை வசதி, சாதி சான்றிதழ், சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எங்கள் வீடுகளும் சிதிலமடைந்து உள்ளன. குடிநீருக்காக, 3 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அவலம் உள்ளது.

அடிப்படை வசதிகள்

இந்த நிலையில் மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் கம்பங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள் இருளிலும், மழையிலும், விஷக்கடி பயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்காலிக பட்டா வழங்கப்படும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறைப்படி இடத்தை அளவீடு செய்து நிரந்தர பட்டா வழங்கவில்லை. குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் கல்வி தொடர முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக உருவாகின்றனர். எனவே இப்பகுதி மக்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story