தீயணைப்போருக்கான அடிப்படை பயிற்சி


தீயணைப்போருக்கான அடிப்படை பயிற்சி
x

புதிதாக தேர்வு செய்யப்பட்ட தீயணைப்போருக்கான அடிப்படை பயிற்சி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக 1,300 தீயணைப்போர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழகம் முழுவதும் 9 பயிற்சி மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் 145 தீயணைப்போருக்கு 3 மாத கால அடிப்படை பயிற்சி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த 9 பயிற்சி மையங்களிலும் அடிப்படை பயிற்சியை தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் ரவி, சென்னை தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது விழுப்புரம் பயிற்சி மையத்தின் முதல்வரும் மாவட்ட தீயணைப்பு அலுவலருமான ராஜேஷ்கண்ணன், வி.ஆர்.எஸ். கல்லூரி முதல்வர் அன்பழகன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story